காட்டுயானை துரத்தியதால் தவறி விழுந்து தொழிலாளி படுகாயம்
கூடலூர் அருகே காட்டுயானை துரத்தியதால் தவறி விழுந்து தோட்ட தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
கூடலூர்
கூடலூர் அருகே காட்டுயானை துரத்தியதால் தவறி விழுந்து தோட்ட தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
காட்டுயானை துரத்தியது
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா பகுதியில் காட்டுயானைகள் ஊருக்குள் அடிக்கடி வருகிறது. மேலும் பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிடுவதோடு விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது.
இந்த நிலையில் ஓவேலி பேரூராட்சி அம்புலி மலைப்பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 56). தனியார் தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை 6 மணிக்கு தனது வீட்டை விட்டு வெளியே வந்தார்.
பின்னர் கழிப்பறைக்கு செல்வதற்காக சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது வீட்டின் பின்புறம் மறைந்து இருந்த காட்டுயானை திடீரென தொழிலாளி முத்துவை விரட்டியது. இதை கண்ட முத்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் காட்டுயானையிடம் இருந்து தப்பிப்பதற்காக சத்தம் போட்டவாறு அங்கிருந்து ஓடினார். சிறிது தூரம் சென்றவுடன் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
சிகிச்சை
மேலும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து காட்டுயானையை விரட்டியடித்தனர். பின்னர் பலத்த காயமடைந்த முத்துவை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரகர் கணேசன், வனவர் சிவப்பிரகாசம், வனக்காப்பாளர் லூயிஸ் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து படுகாயமடைந்த முத்துவுக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் அம்புலி மலைப்பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டுயானையை வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story