உப்பளத் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி அருகே உப்பளத் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது45). உப்பளத் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பின்பு வீட்டில் உள்ள அனைவரும் தூங்கச் சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணி அளவில் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த நாகராஜை, அந்தப் பகுதியில் உள்ளவர்கள் பார்த்து முத்தையாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த நாகராஜூவுக்கு ஜெயராணி என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story