கடலூர் சில்வர் பீச்சில் குவிந்த பொதுமக்கள்


கடலூர் சில்வர் பீச்சில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 20 Feb 2022 10:00 PM IST (Updated: 20 Feb 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் சில்வர் பீச்சில் பொதுமக்கள் குவிந்தனர்.

கடலூர், 

கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர் பீச் உள்ளது. இந்த பீச்சுக்கு கடலூர் மாநகர பொதுமக்கள், சுற்றியுள்ள பொதுமக்கள் வந்து செல்வார்கள். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான பொதுமக்கள் வந்து கடற்கரையின் அழகை கண்டு ரசிப்பார்கள். சுற்றுலா பயணிகளும் வந்து செல்கிறார்கள். இதனால் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக விடுமுறை நாட்களில் கூட்டம் குறைவாக இருந்தது. ஏனெனில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் ஈடுபட்டதால், மக்களும் வீடுகளில் முடங்கினர். இதற்கிடையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் முடிந்தது.

கூட்டம்

இதையடுத்து நேற்று கடலூர் சில்வர் பீச்சுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் மாலை 3 மணிக்கே சில்வர் பீச்சுக்கு பொதுமக்கள் வர தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல பொதுமக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது. மாலை 5 மணிக்கு கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வந்து சீறி பாய்ந்த கடல் அலையின் அழகை ரசித்தனர். கடற்கரையில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். சிறுவர்கள் மணலில் விளையாடினர். குதிரை சவாரி செய்தும், விளையாட்டு உபகரணங்களில் விளையாடியும் மகிழ்ந்தனர். ஆனால் மாலை 6.45 மணிக்கே பொதுமக்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் துரத்தி விட்டனர். இதனால் ஒவ்வொருவராக புறப்பட்டு செல்ல ஆரம்பித்தனர். இரவு 7.30 மணிக்கு பெரும்பாலான பொதுமக்கள் சென்று விட்டனர். தாமதமாக வந்தவர்கள் கடற்கரைக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதையும் பார்க்க முடிந்தது.

Next Story