நீர்வரத்து அடியோடு நின்றதால் பாறைகளாக காட்சி அளிக்கும் மார்க்கண்டேயன் நதி-விவசாயிகள் வேதனை
நீர்வரத்து அடியோடு நின்றதால் மார்க்கண்டேயன் நதி பாறைகளாக காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி:
மார்க்கண்டேயன் நதி
கர்நாடக மாநிலத்தில் இருந்து மார்க்கண்டேயன் நதி உருவாகிறது. இந்த நதி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தமிழகத்துக்குள் நுழைகிறது. மார்க்கண்டேயன் நதியால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் பல ஏரிகளின் முக்கிய நீர் ஆதாரமாகவும் இந்த நதி உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக மார்க்கண்டேயன் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மே மாதத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று கூறப்பட்டு வந்தது. மேலும் விளை நிலங்களுக்கு போதிய தண்ணீர் வசதி கிடைக்கும் என்று எண்ணி விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
பாறைகளாக...
இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக கர்நாடக மாநிலத்தில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் மார்க்கண்டேயன் நதிக்கு நீர்வரத்து அடியோடு நின்றது. தற்போது மார்க்கண்டேயன் நதி நீரின்றி வரண்டு காணப்படுகிறது. புதர்களாகவும், பாறைகளாகவும் மார்க்கண்டேயன் நதி காட்சி அளிக்கிறது.
இதனால் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்நாடக மாநிலத்தில் மார்க்கண்டேயன் நதியின் குறுக்கே யார்க்கோள் என்ற இடத்தில் அணை கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story