ஓசூர் மாநகராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
ஓசூரில் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் வந்தனா கார்க் ஆய்வு செய்தார்.
ஓசூர்:
ஓசூர் மாநகராட்சி தேர்தல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. மொத்தம் 248 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். இறுதி நிலவரப்படி ஓசூரில் 63.97 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக ஓசூர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு நாளை (செவ்வாய்க்கிழமை) ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் பார்வையாளர் ஆய்வு
இந்தநிலையில், ஓசூரில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் பார்வையாளர் வந்தனா கார்க் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படுகிறதா? என பார்வையிட்டார். வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்து, ஆலோசனைகள் வழங்கினார். ஆய்வின் போது தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story