தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 20 Feb 2022 10:02 PM IST (Updated: 20 Feb 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தர்மபுரி:
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
வாக்கு எண்ணும் மையம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சி் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. தர்மபுரி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத் தலைமையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஒரு ஷிப்டுக்கு 55 பேர் வீதம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் எச்சரிக்கை
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்திற்கு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக அரசியல் கட்சியினர் யாரும் வாக்கு எண்ணும் மையத்திற்கு வர வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சி பகுதிகளில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Next Story