தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு


தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Feb 2022 10:03 PM IST (Updated: 20 Feb 2022 10:03 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் திவ்யதர்சினி திடீர் ஆய்வு செய்தார்.

தர்மபுரி:
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் திவ்யதர்சினி திடீர் ஆய்வு செய்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர், கடத்தூர், அரூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் அமைதியாக நடைபெற்றது. இந்த தேர்தலில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 80.49 சதவீத வாக்குகள் பதிவானது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தில் 24 மணி நேரமும் போலீசார், கண்காணிப்பு அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் திவ்யதர்சினி திடீர் ஆய்வு செய்தார். வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு குறித்து போலீசார், அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
இதை தொடர்ந்து கலெக்டர் வாக்கு எண்ணும் மையத்தில் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்பு வேலிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், போலீஸ் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story