நாமக்கல்லில் ஆம்புலன்சில் வந்து ஓட்டு போட்ட மூதாட்டி சாவு


நாமக்கல்லில் ஆம்புலன்சில் வந்து ஓட்டு போட்ட மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 20 Feb 2022 10:15 PM IST (Updated: 20 Feb 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் ஆம்புலன்சில் வந்து ஓட்டு போட்ட மூதாட்டி சாவு

நாமக்கல்:
நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை கொளந்தான் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி லட்சுமி (வயது 75). இவர் வயது முதிர்ச்சி மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 3 மாதங்களாக வீட்டிலேயே படுக்கையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவின்போது சில அரசியல் கட்சி பிரமுகர்கள், அவரை ஏ.எஸ்.பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு ஆம்புலன்சில் அழைத்து வந்தனர். பின்னர் ஸ்ட்ரெச்சரில் வாக்குச்சாவடிக்கு உள்ளே கொண்டு சென்றனர். அவரால் ஓட்டு போட முடியாததால், அவரது மகள் தேவி அவருக்காக ஓட்டு போட்டார். இதையடுத்து அவரை ஆம்புலன்சில் வீட்டுக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே வீட்டுக்கு திரும்பி சென்ற அவர் நள்ளிரவு உயிரிழந்தார்.

Next Story