தாய் இறந்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்து மகன் தற்கொலை
வேதாரண்யம் அருகே தாய் இறந்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்து மகன் தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே தாய் இறந்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்து மகன் தற்கொலை செய்து கொண்டார்.
தாய் இறந்ததால் துக்கம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூர் சர்வகட்டளை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது51). விவசாயி. இவருடைய தாயார் கமலாம்பாள் (80). இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தாய் மீது அதிகம் பாசம் வைத்திருந்த நகராஜன், தாய் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் எந்த நேரமும் துக்கத்துடனே காணப்பட்டார்.
இந்த நிலையில் தாய் இறந்த துக்கம் தாங்காமல் இருந்து வந்த நாகராஜன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.
விஷம் குடித்து மகன் தற்கொலை
உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக உயிாிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story