வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி


வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 20 Feb 2022 11:06 PM IST (Updated: 20 Feb 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார். மேலும் இதில் படுகாயம் அடைந்த அவரது மனைவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார். மேலும் இதில் படுகாயம் அடைந்த அவரது மனைவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சுவர் இடித்து விழுந்தது
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வடவூர் வடக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 40). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜான்சிராணி (30). இவர்களுக்கு கனிஷ்கா(3) என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் நேற்று இரவு தங்களது கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில் திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் மாடசாமி, ஜான்சிராணி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு சத்தம் போட்டுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கினர்
 இவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாடசாமி பரிதாபமாக உயிரிழந்தார். ஜான்சிராணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இதில் மாடசாமியின் மகள் கனிஷ்கா காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story