தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 Feb 2022 11:20 PM IST (Updated: 20 Feb 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

ஆபத்தான பள்ளிக்கூட சுவர்
ஆரல்வாய்மொழி, பெருமாள்புரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நுழைவு பகுதியில் அமைந்துள்ள காம்பவுண்டு சுவரில் கீறல் விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் சுவர் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளி குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
                           -செந்தமிழ்ச்செல்வி, ஆரல்வாய்மொழி.
எரியாத தெரு விளக்குகள்
கோவளம் பஞ்சாயத்துக்குட்பட்ட சுனாமி காலனி பகுதியில் உள்ள தெருக்களில் மின்கம்பங்களில் தெரு விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின் விளக்குகளை மாற்ற வேண்டும்.
 -குமார், முருகன்குன்றம்.
சேதமடைந்த வேகத்தடை
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ராமவர்மபுரம் செல்லும் சாலையில் ரப்பரால் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை தற்போது சேதமடைந்து சில ரப்பர் ஷீட்டுகள் கழன்று இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பஞ்சர் ஆகி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த வேகத்தடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், நாகர்கோவில்.
மாற்ற வேண்டிய மின்கம்பம்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வட்டவிளையில் சானல் ரோடு உள்ளது. இந்த சாலையின் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் ஒன்று நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. தற்போது இங்கு சாலை பணி நடைபெறவுள்ளது. சாலை பணி தொடங்குவதற்கு முன் மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேசன், வட்டவிளை.

Next Story