திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
விடுமுறை நாளில் திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
திருவட்டார்,
விடுமுறை நாளில் திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
திற்பரப்பு அருவி
குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தற்போது மிதமான தண்ணீர் கொட்டுகிறது. விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவிக்கு உள்ளூர் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வந்தனர்.
அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். சிறுவர்கள் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தனர். பின்னர் அருவி எதிரில் உள்ள பூங்கா மற்றும் அலங்கார நீரூற்று ஆகியவற்றையும் பார்த்து ரசித்தனர்.
படகு சவாரி
திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில் உள்ள அணைக்கட்டு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சென்றனர். அங்கு அவர்கள் உல்லாச படகு சவாரி செய்தனர்.
இலையுதிர் காலம் முடிந்து தற்போது ரப்பர் மரங்களில் இலைகள் புதிதாக துளிர்த்துள்ளதால் அருவியைச் சுற்றியுள்ள மரங்கள் பச்சை பசேல் என அழகாக காட்சி தருகிறது. அந்த இயற்கை அழகையும் சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story