காதலியை தொடர்பு கொள்ள முடியாததால் வாலிபர் தற்கொலை
மார்த்தாண்டம் அருகே காதலியை தொடர்பு கொள்ள முடியாததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே காதலியை தொடர்பு கொள்ள முடியாததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வெளிநாட்டில் வேலை
மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவருடைய மகன் அனீஷ் (வயது 24). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அனீஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வருவதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அனீஷ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.
அதன்பின்பு காதலியை சந்திக்க பல முறை முயன்றார். ஆனால் முடியவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அனீஷ் மனமுடைந்து காணப்பட்டார்.
தற்கொலை
கடந்த சில நாட்களாக அனீஷ் யாருடனும் அதிகம் பேசாமல் சோகமாக இருந்துள்ளார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.
இந்தநிலையில் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த அனீஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் தாய் கதறி அழுதார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அனீஷின் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதலிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story