தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து


தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 20 Feb 2022 11:26 PM IST (Updated: 20 Feb 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

குன்னம் அருகே தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குன்னம், 
தனியார் நிறுவன ஊழியர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சித்தளி கிராமம் நடுதெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு பெரம்பலூரில் இருந்து பேரளி வழியாக சித்தளி கிராமத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 
பெரம்பலூர்-அரியலூர் சாலையில் சித்தனி வனகாப்பு அலுவலகம் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 3 மர்ம ஆசாமிகள் பிரபாகரன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.
கத்திக்குத்து
இதில், சுதாரித்துக்கொண்ட பிரபாகரன் அந்த மர்ம ஆசாமிகளிடம் இருந்து தப்பிக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பிரபாகரன் தலையில் ஹெல்மெட்டால் அடித்தும், வயிற்றுப்பகுதியில் கத்தியால் குத்தினர். பின்னர் அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில், படுகாயமடைந்த பிரபாகரனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். 
இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story