மோட்டார் சைக்கிள்கள் மோதல்;தொழிலாளி சாவு
புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வெல்டிங் பட்டறை தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 2 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.
புதுக்கடை,
புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வெல்டிங் பட்டறை தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 2 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.
தொழிலாளி
புதுக்கடை அருகே உள்ள முக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் வின்சர் (வயது 45). இவர் வில்லுக்குறி பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு, தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம்- தேங்காப்பட்டணம் சாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முக்காடு பகுதியில் சென்ற போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஆல்பர்ட் வின்சர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
சாவு
இதில் தூக்கி வீசப்பட்ட ஆல்பர்ட் வின்சர் பலத்த காயமடைந்தார். எதிரே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிறுவர்கள் 2 பேரும் படுகாயமடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆல்பர்ட் வின்சர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
படுகாயமடைந்த இரண்டு சிறுவர்களும் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் இதுகுறித்து இறந்த ஆல்பர்ட் வின்சரின் மனைவி சாந்தி அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story