அரசு பஸ் கண்டக்டரை கீழே தள்ளிய வடமாநில இளைஞர்கள்
டிக்கெட் எடுக்க கூறிய அரசு பஸ் கண்டக்டரை வடமாநில இளைஞர்கள் கீழே தள்ளினர்
பாடாலூர்,
பெரம்பலூரில் இருந்து திருச்சி மாவட்டம், திருப்பட்டூருக்கு ஒரு அரசு டவுன் பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை புறப்பட்டது. அப்போது சிறுவாச்சூர் பஸ் நிறுத்தத்தில் விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரியும் வடமாநில இளைஞர்கள் சிலர் பஸ்சில் ஏறியுள்ளனர். அவர்களில் 4 பேர் மட்டும் டிக்கெட் எடுத்ததாக கூறப்படுகிறது. மற்றவர்கள் எடுக்கவில்லை. இதனால் விஜயகோபாலபுரம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அவர்களில் டிக்கெட் எடுக்காதவர்களிடம் கண்டக்டர் ஆறுமுகம் டிக்கெட் எடுக்குமாறு கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கும், கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பஸ்சின் பின்பக்க படிக்கட்டில் நின்று கொண்டிருந்த கண்டக்டரை வடமாநில இளைஞர்கள் கீழே தள்ளி விட்டனர். இதில் காயமடைந்த கண்டக்டர் ஆறுமுகம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story