வாக்கு எண்ணிக்கையின்போது பிரச்சினையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை. போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


வாக்கு எண்ணிக்கையின்போது பிரச்சினையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை. போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 Feb 2022 11:40 PM IST (Updated: 20 Feb 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

வாக்கு எண்ணிக்கையின்போது பிரச்சினைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறினார்.

குடியாத்தம்

வாக்கு எண்ணிக்கையின்போது பிரச்சினைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறினார்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று இரவு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆய்வு செய்தார். 

துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமமூர்த்தி, ரவிச்சந்திரன், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அசோக்குமார், சுவாதி,  இன்ஸ்பெக்டரகள்் முரளிதரன், லட்சுமி, சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

1,000 போலீசார் பாதுகாப்பு

 வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அனைத்து அலுவலர்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் மிகவும் சுமூகமாக நடைபெற்றது. அதேபோல் வாக்கு எண்ணிக்கையும் சுமூகமாக நடைபெற வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 

வேலூர் மாநகராட்சியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 350 போலீசார், குடியாத்தம் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 200 போலீசார், பேர்ணாம்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் 150 போலீசார், பள்ளிகொண்டா வாக்கு எண்ணிக்கை மையத்தில் 150 போலீசார் மற்றும் 150 போலீசார் பிரச்சினைக்குரிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சுமூகமான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.

கடும் நடவடிக்கை

வாக்கு எண்ணிக்கையின் போது பிரச்சினைகளில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வேட்பாளருடன் ஒரு முகவர் மட்டுமே வர வேண்டும்.  ஒரு சுற்று முடிந்தவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும். வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வெளியே சென்ற பின் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கும். அந்த சுற்றில் வரும் வார்டுகளின் வேட்பாளர்களும் அவர்களது முகவர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.

 கண்டிப்பாக எக்காரணம் கொண்டும் செல்போன்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை. வேட்பாளர் மற்றும் அவரது முகவர்கள் பேனா, பேப்பர் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story