ஆம்பூர் நகராட்சி தேர்தலில் போலி தங்க நாணயம் கொடுத்து ஏமாற்றிய சுயேச்சை பெண் வேட்பாளரின் கணவர்
ஆம்பூர் நகராட்சி தேர்தலில் சுயேச்சை பெண் வேட்பாளரின் கணவர் வாக்காளர்களுக்கு போலி தங்க நாணயம் கொடுத்து ஏமாற்றியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆம்பூர்
ஆம்பூர் நகராட்சி தேர்தலில் சுயேச்சை பெண் வேட்பாளரின் கணவர் வாக்காளர்களுக்கு போலி தங்க நாணயம் கொடுத்து ஏமாற்றியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தங்க நாணயம்
ஆம்பூர் நகராட்சியில் நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க.வில் வாய்ப்பு கேட்டு கிடைக்காததால் தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் தனது மனைவியை சுயேச்சை வேட்பாளராக போட்டியிட செய்தார்.
அவர் தனது மனைவிக்கு வாக்களிக்க கோரி 18-ந் தேதி இரவு சுமார் 1,500 வாக்காளர்களுக்கு தங்க நாணயங்களை வழங்கியதாக கூறப்படுகிறது. வாக்குப் பதிவு நாளில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த சில வாக்காளர்கள், வாக்குப் பதிவுக்குப்பிறகு, பெண் வேட்பாளரின் கணவர் கொடுத்த தங்க நாணயத்தின் தரத்தை சோதனை செய்து பார்த்துள்ளனர்.
போலியானது
அப்போது அது போலி நாணயம் என்பது தெரிய வந்துள்ளது. போலி தங்க நாணயம் கொடுத்து சுயேச்சை வேட்பாளரின் கணவர் ஏமாற்றி விட்டார் என வாக்காளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் பெண் வேட்பாளரிந் கணவரை தேடி அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் வீட்டில் இல்லை.
இதுகுறித்து வேட்பாளரின் கணவரிடம் கேட்டபோது, சுயேச்சை வேட்பாளரான என்னுடைய மனைவிக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை சந்தித்து வேண்டினேன். மேலும் எந்த பரிசு பொருளையும் வாக்காளர்களுக்கு வழங்கவில்லை. என் மீது வீண் பழி சுமத்துகின்றனர் என்று கூறினார்.
Related Tags :
Next Story