கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமை
கடலில் இருந்து வழிதவறி வந்து கொள்ளிடம் ஆற்றில் கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமையை வனத்துறையினர் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.
கொள்ளிடம்:
கடலில் இருந்து வழிதவறி வந்து கொள்ளிடம் ஆற்றில் கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமையை வனத்துறையினர் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.
ஆற்றில் தத்தளித்த ஆமை
கொள்ளிடம் அருகே உள்ள சரஸ்வதி விளாகம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெரிய ஆமை, ஆற்றில் கரையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதை பார்த்த சிறுவர்கள், அந்த ஆமையை பிடித்து வைத்துக்கொண்டு கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆமையை பார்வையிட்டனர்.
மீண்டும் கடலில் விட்டனர்
இதுதொடர்பாக போலீசார், வனத்துறையினருக்கு தெரிவித்தனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல், வனக்காப்பாளர் செந்தமிழ்ச்செல்வன், வனவர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் சிறுவர்களிடம் இருந்து ஆமையை மீட்டு சென்றுமீண்டும் கடலில் விட்டனர்.
இதுகுறித்து வனவர் சிவசுப்பிரமணியம் கூறுகையில், இந்த ஆமை அரிய வகையான ஆலிவர் ரெட்லி வகையை சேர்ந்தது. இவை 300 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது. டிசம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை ஆழ்கடல் பகுதியில் இருந்து கரைக்கு வந்து முட்டையிட்டு மீண்டும் கடலுக்கு செல்லும். இந்த ஆமை வழிதவறி கொள்ளிடம் ஆற்றின் வழியே வந்து கரை ஒதுங்கி உள்ளது என்றார்.
Related Tags :
Next Story