பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
x
தினத்தந்தி 21 Feb 2022 12:07 AM IST (Updated: 21 Feb 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வௌ்ளை ஈ பூச்சி தாக்குதல்கட்டுபடுத்தும் வழிமுறைகளை வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை, 
தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வௌ்ளை ஈ பூச்சி தாக்குதல்கட்டுபடுத்தும் வழிமுறைகளை வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தென்னை சாகுபடி
சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 7,332 எக்ேடரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ள வட்டாரங்களில் ரூகோஸ் சுருள் வௌ்ளை ஈ பூச்சிதாக்குதல் சமீப காலமாக தென்படுகிறது. 
இந்த ரூகோஸ் சுருள் வௌ்ளை ஈ பூச்சிகள் வயதில் முதிர்ந்த வௌ்ளை ஈக்கள் மஞ்சள் நிற முட்டைகளை சுழல் வடிவ அமைப்புகளில் தென்னை ஓலைகளின் பின்புறத்தில் இடுக்கின்றன. குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் தென்னை ஓலைகளின் அடிபாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுகின்றன. மேலும் அவை தேன் போன்ற கழிவுகளையும் வெளியேற்றுவதால் ஓலைகளின் மேற்பரப்பில் கரும் பூசணம் படர்ந்து காணப்படும்.
இந்த ரூகோஸ் சுருள் வௌ்ளை ஈக்கள் தென்னை மரங்கள் மட்டுமல்லாது வாழை, சப்போட்டா பயிர்களையும் தாக்கு கிறது. எனவே ரூகோஸ் சுருள் வௌ்ளை ஈ மேலும் பரவாமல் தடுக்க கீழ்கண்ட முறைகளை கையாள வேண்டும். மஞ்சள் நிறம் வளர்ச்சி அடைந்த வௌ்ளை ஈக்களை கவரும் தன்மை உடையதால் மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகள் 5 அடிக்கு 11-க்கு 2 என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு 8 எண்கள், 2 மரங்களுக்கு இடையே 10 அடி உயரத்தில் கட்ட வேண்டும். மஞ்சள் நிற விளக்குப்பொறிகள் ஏக்கருக்கு 2 வீதம் தென்னந்தோப்புகளில் வைத்து அவற்றை மாலை 6 மணி முதல் 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலம் வௌ்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். 
பூஞ்சாணம்
தாக்குதல் ஏற்பட்டுள்ள தென்னை மரங்களின் மீது தெளிப்பான் கொண்டு வேகமாக தண்ணீரை அடிப்பதன் மூலம் வௌ்ளை ஈக்கள் மற்றும் கரும் பூஞ்சாணங்களை அழிக்கலாம்.
வௌ்ளை ஈக்கள் அதிக அளவில் தென்படும்போது பொறிவண்டுகள், என்கார்சியா ஒட்டுண்ணிகள் இயற்கையாகவே தோப்புகளில் தென்பட ஆரம்பிக்கும். என்கார்சியா ஒட்டுண்ணிகள் அதிக அளவில் உருவாகி வௌ்ளை ஈக்களின் சேதத்தை பெருமளவில் குறைக்கிறது. என்கார்சியா ஒட்டுண்ணிகளை தென்னந்தோப்புக்களில் கவர தட்டைப்பயறு, சூரியகாந்தி மற்றும் சாமந்தி விதைகளை தூவி விடவேண்டும். 
வினியோகம்
மேலும் கிரைசோபொலா என்கிற இரை விழுங்கிகள், ரூகோஸ் சுருள் வௌ்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை நன்றாக உட்கொள்ளுவதால் தாக்கப்பட்ட தோப்புகளில் ஏக்கருக்கு 400 முட்டைகள் என்ற எண்ணிக்கையில் விடுதல் வேண்டும். இவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் மூலம் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட மேலாண்மை முறைகளை பயன்படுத்தி தென்னையில் தென்படும் ரூகோஸ் சுருள் வௌ்ளை ஈக்களை கட்டுப் படுத்தலாம். இந்த தகவலை வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Next Story