ஓட்டல் கடைக்காரரை வெட்ட முயற்சி; வாலிபர் கைது


ஓட்டல் கடைக்காரரை வெட்ட முயற்சி; வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2022 12:20 AM IST (Updated: 21 Feb 2022 12:20 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே ஓட்டல் கடைக்காரரை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை அருகே ஓட்டல் கடைக்காரரை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஓட்டல் கடைக்காரர்
நெல்லை அருகே உள்ள சங்கர்நகர் பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 48). இவர் தாழையூத்து பஜாரில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் சங்கர்நகர் பகுதியை சேர்ந்த மதன் (22) என்பவர் செல்லத்துரையின் ஓட்டலுக்கு வந்து புரோட்டா வாங்கினார். அப்போது மதன், செல்லத்துரையிடம் குழம்பு அதிகமாக தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இதில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் மதன் அங்கிருந்து சென்று விட்டார்.

அரிவாளால் வெட்ட முயற்சி
பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கு வந்த மதன் மீண்டும் செல்லத்துரையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தான் கையில் வைத்திருந்த அரிவாளால் செல்லத்துரையை வெட்ட முயன்றதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மதனை கைது செய்தனர்.

Next Story