புகார் பெட்டி
புகார் பெட்டியில் மக்கள் தெரிவித்த கோரிக்கை விவரம் வருமாறு
தொகுப்பு வீடுகள் சீரமைக்கப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் வாணாதிராஜபுரம் இந்திரா நகரில் 15-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகள் தற்போது பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக வீடுகளின் மேற்கூரைகளில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும், சுவர்களிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வீடுகளில் உள்ள சுவர்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் குடியிருப்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் உள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், குத்தாலம்.
Related Tags :
Next Story