பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்


பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 21 Feb 2022 12:29 AM IST (Updated: 21 Feb 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

சீர்காழி:
சிதம்பரத்தில் இருந்து காரைக்காலை நோக்கி நேற்று முன்தினம் இரவு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சீர்காழியை சேர்ந்த பத்மநாதன்(வயது46) டிரைவராகவும், சிதம்பரம் அருகே உள்ள மேலமணக்குடியை சேர்ந்த சபரி(27) கண்டக்டராகவும் பணியில் இருந்தனர். இந்த பஸ் இரவு 8.30 மணி அளவில் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் வந்தது. அப்போது  அங்கு வந்த 20-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் பஸ்சை மறித்து பஸ்சில் இருந்த டிரைவர் பத்மநாபன் மற்றும் கண்டக்டர் சபரி ஆகியோரை கீழே இழுத்து வந்து அவர்களை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து பத்மநாபன் கொடுத்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story