லோடு ஆட்டோ மோதி வைக்கோல் வியாபாரி சாவு


லோடு ஆட்டோ மோதி வைக்கோல் வியாபாரி சாவு
x
தினத்தந்தி 21 Feb 2022 12:51 AM IST (Updated: 21 Feb 2022 12:51 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் லோடு ஆட்டோ மோதி வியாபாரி இறந்தார்.

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் லோடு ஆட்டோ மோதி, வைக்கோல் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

வைக்கோல் வியாபாரி
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன் என்பவருடைய மகன் சாமி (வயது 45). வைக்கோல் வியாபாரி. இவர் நேற்று மதியம் சங்கரன்கோவில் - நெல்லை சாலையில் உள்ள ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த குருசாமி மகன் விஜயகுமார் (45) என்பவர் ஓட்டி வந்த லோடு ஆட்டோ நிலைதடுமாறி சாமி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சாமி படுகாயம் அடைந்தார்.

பரிதாப சாவு
அவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் காயமடைந்த லோடு ஆட்டோ டிரைவர் விஜயகுமாரும் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story