வட்ட செயலாளர் மீது தாக்குதல் அ.தி.மு.க. சாலை மறியல்
அ.தி.மு.க., வட்ட செயலாளர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து அ.தி.மு.க. சாலை மறியல் போரோட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பெரம்பூர்,
சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட 51-வது வார்டில் அமைந்துள்ள வண்ணாரப்பேட்டை வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த முன்விரோதம் காரணமாக ராயபுரம் கல்லறை சாலையை சேர்ந்த அ.தி.மு.க., வட்ட செயலாளர் துரை என்பவர் நேற்று தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது, தி.மு.க.வினர் சிலர் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த துரை, அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் அ.தி.மு.க. வட்ட செயலாளர் துரையை தாக்கிய தி.மு.க.வினரை கண்டித்து கிழக்கு கல்லறை சாலையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் நேற்று மாலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த ராயபுரம் மற்றும் வண்ணாரப்பேட்டை போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினர். வட்ட செயலாளரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story