ஆடு திருடிய 2 பேர் கைது


ஆடு திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2022 12:55 AM IST (Updated: 21 Feb 2022 12:55 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை அருகே ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி ஜெயராம் நகரைச்சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 32). இந்நிலையில்  வீட்டின் வெளியே நாய்கள் அதிகமாக சத்தம் போட்டு கொண்டு இருந்தது. இதையடுத்து அவர் வெளிேய வந்து பார்த்த போது மாரிமுத்து வீட்டில் வளர்க்கும் ஆடுகளை 2 மர்மநபர்கள் திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை மாரிமுத்து மற்றும் அவருடைய அண்ணன் இருவரும் துரத்திச்சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ராமசாமிநகரை சேர்ந்த சூர்யா (23) உள்பட 2 பேர் சேர்ந்து ஆட்டை திருடியது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story