ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி- அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி- அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Feb 2022 12:55 AM IST (Updated: 21 Feb 2022 12:55 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இடிந்து விழும் அபாயம்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி மூலம் அந்த பகுதி மக்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர். 
அதே நேரத்தில், அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. அதன் தூண்கள் அனைத்திலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

அகற்ற கோரிக்கை
அந்த ஆபத்தான நீர்த்தேக்க தொட்டிக்கு அருகில் நடுநிலைப்பள்ளி, கோவில் மற்றும் மைதானம் ஆகியவை உள்ளது. எனவே அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்கு முன்பாக, அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து தருவதற்கான உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.  

Next Story