‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 21 Feb 2022 1:05 AM IST (Updated: 21 Feb 2022 1:05 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மேம்பாலம் சீரமைக்கப்படுமா?

மதுரை ஆல்பர்ட் விக்டர் (ஏ.வி.) மேம்பாலம் சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. மேம்பாலம் வர்ணம் பூசப்படாமல் சேதமடைந்து காணப்படுகிறது. இரவில் விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இ்ந்த மேம்பாலத்தை வர்ணம் பூசி, விளக்குகள் அமைத்து சீரமைக்க வேண்டும்.
அன்புமணி, மதிச்சியம்.

குடிநீர் வசதி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி கக்கிவாடன்பட்டி அருகே கான்சாபுரம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தண்ணீரின்றி மிகவும் சிரமப்படுகின்றனர். குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்கின்றனர். சிலர் காசு கொடுத்தும் குடிநீரை வாங்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும்.
தரிசனகுமார், கான்சாபுரம்.

மாடுகள் தொல்லை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவில் மாடுகள் அதிக அளவில் சாலையில் நடமாடுகிறன. காலையில் சாலையில் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இரவில் சாலையில் படுத்து வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்தி அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
மகாகவி, ஜெய்ஹிந்த்புரம்.

வேகத்தடை வேண்டும்

 மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமம் இளங்காளி அம்மன் கோவில் எதிரே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் வேகமாக செல்கின்றன. இரவில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. ஆதலால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நலன்கருதி இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
பாலமுருகன், முள்ளிப்பள்ளம்.

போக்குவரத்து நெரிசல்

மதுரை மாவட்டம் சோழவந்தான், துவரிமான், கோச்சடை செல்லும் மேலக்கால் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. தினமும் வாகன நெருக்கடியால் விபத்து அபாயம் உள்ளது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் மேம்பாலம் கட்டி நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.
ராஜன், கோச்சடை.

Next Story