நகராட்சிகள், பேரூராட்சி தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டிய பெண்கள்


நகராட்சிகள், பேரூராட்சி தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டிய பெண்கள்
x
தினத்தந்தி 21 Feb 2022 1:24 AM IST (Updated: 21 Feb 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் வாக்களிக்க பெண்கள் ஆர்வம் காட்டினர். ஆண்களை விட பெண்களே அதிகளவில் ஓட்டுப்பதிவு செய்தனர்.

சேலம்:-
சேலம் மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் வாக்களிக்க பெண்கள் ஆர்வம் காட்டினர். ஆண்களை விட பெண்களே அதிகளவில் ஓட்டுப்பதிவு செய்தனர்.
பெண்கள் ஓட்டு அதிகம்
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, நரசிங்கபுரம், இடங்கணசாலை ஆகிய 6 நகராட்சிகளில் மொத்தம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 689 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 567 பெண் வாக்காளர்கள், 23 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 279 பேர் வாக்களிப்பதற்கு தகுதியானவர்களாக இருந்தனர். இதில் நேற்று முன்தினம் 86 ஆயிரத்து 268 ஆண் வாக்காளர்கள், 88 ஆயிரத்து 606 பெண் வாக்காளர்கள் மற்றும் 3 திருநங்கைகள் என மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 877 பேர் வாக்களித்தனர். இது 76.61 சதவீதமாகும்.
மேலும் 6 நகராட்சிகளில் ஆண்களை விட பெண்களே அதிகளவு வாக்களித்துள்ளனர். அதாவது, இடங்கணசாலை, தாரமங்கலம் ஆகிய நகராட்சிகளை தவிர மற்ற நகராட்சிகளில் பெண்கள் தான் அதிகளவு ஓட்டு போட்டுள்ளனர். குறிப்பாக எடப்பாடி நகராட்சியில் மட்டும் 25 ஆயிரத்து 132 பெண் வாக்காளர்களில் 20 ஆயிரத்து 809 பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரூராட்சிகள்
இதேபோல் 31 பேரூராட்சிகளில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 811 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 2 ஆயிரத்து 655 பெண் வாக்காளர்கள் மற்றும் 24 திருநங்கைகள் என மொத்தம் 3 லட்சத்து 97 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்க இருந்தனர். இதில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 543 ஆண்கள், 1 லட்சத்து 57 ஆயிரத்து 769 பெண்கள் மற்றும் 7 திருநங்கைகள் என மொத்தம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 319 பேர் வாக்களித்தனர். இது 77.82 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.
நகராட்சிகள் போல் பேரூராட்சிகளிலும் பெண்கள் தான் அதிகளவு ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர். அதாவது, அரசிராமணி, காடையாம்பட்டி, மேச்சேரி, நங்கவள்ளி ஆகிய பேரூராட்சிகளை தவிர மற்றவற்றில் அனைத்தும் பெண்கள் ஓட்டு தான் அதிகளவு பதிவாகி உள்ளது. குறிப்பாக சங்ககிரியில் 14 ஆயிரத்து 133 பெண் வாக்காளர்களில் 9 ஆயிரத்து 362 பேர் வாக்களித்துள்ளனர்.
இதன்மூலம் சேலம் மாவட்டத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் வாக்களிக்க பெண்கள் ஆர்வம் காட்டினர். ஆண்களை விட பெண்களே அதிகளவில் ஓட்டுப்பதிவு செய்தனர்.

Related Tags :
Next Story