ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 21 Feb 2022 1:24 AM IST (Updated: 21 Feb 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

விடுமுறை நாளான நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஏற்காடு:-
விடுமுறை நாளான நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஏற்காடு
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் சுற்றுலா பயணிகளால் ஏற்காடு களை கட்டியது. 
குறிப்பாக லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாய்ண்ட், சேர்வராயன் கோவில், ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர் வீழ்ச்சி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று மகிழ்ந்தனர். 
கடும் பனிப்பொழிவு காரணமாக தாங்கள் தங்கியிருந்த அறையிலேயே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் முடங்கினர். காலை 8 மணிக்கு மேல் தங்களது அறையில் இருந்து வெளியே வந்தனர். இதைத்தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.
படகு சவாரி 
ஏற்காடு முக்கிய சாலைகளில் சாலையோர கடைகள் அதிகரித்ததால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் சாலையை கடக்க சிரமப்பட்டனர். 
ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய அதிக அளவில் ஆர்வம் காட்டினர். ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால், விசைப்படகில் சவாரி செய்ய நீண்ட நேரம் காத்திருந்து பிறகு சவாரி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story