தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு


தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 21 Feb 2022 1:46 AM IST (Updated: 21 Feb 2022 1:46 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

திருச்சி:

தனியார் நிறுவன மேலாளர்
திருச்சி கே.கே. நகர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பசுபதி(வயது 49). இவர் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16-ந் தேதி மனைவியுடன் சென்னைக்கு சென்று இருந்தார். இவருடைய வீட்டின் கீழ் தளத்தில் அவரது மாமனார், மாமியார் வசித்து வருவதால் சென்னைக்கு செல்லும்போது, வீட்டைப் பூட்டாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து அவர் மீண்டும் வீடு திரும்பினார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள், துணிமணிகள் சிதறி கிடந்தன.
20 பவுன் நகைகள் திருட்டு
மேலும் பீரோவுக்குள் வைத்திருந்த 20 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் மற்றும் வீட்டில் இருந்த எல்.இ.டி. டி.வி. ஆகியவை திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பசுபதி இது குறித்து கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் தடயங்கள் ஏதும் உள்ளதா? என்று சோதனை நடத்தினார்கள். தொடர்ந்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து நகைகள் மற்றும் பணத்தை திருடி கொண்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை கே.கே.நகர் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story