திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள்


திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள்
x
தினத்தந்தி 21 Feb 2022 5:26 AM IST (Updated: 21 Feb 2022 5:26 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி முருகன் கோவிலில் ேநற்று அதிக அளவில் பக்தர்கள் திரண்டனர்.

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆந்திர, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கூட்டமாக திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கிருத்திகை நாட்களில் வரும் பக்தர்களாலும் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

இதன் காரணமாக எப்போதும் இல்லாத அளவில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மலைக்கோவில் அடிவாரத்தில் அளவுக்கு அதிகமான வாகனங்கள் வருகையால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொதுவழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதேபோல் ரூ.100 மற்றும் ரூ.150 சிறப்பு தரிசன டிக்கெட்டை பெற்ற பக்தர்கள், 2 மணி நேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

Next Story