வாக்கு எண்ணும் மையத்தில் டிஐஜி ஆனி விஜயா ஆய்வு
போளூர் வாக்கு எண்ணும் மையத்தில் டிஐஜி ஆனி விஜயா ஆய்வு
போளூர்
போளூர், கண்ணமங்கலம், களம்பூர் ஆகிய 3 பேரூராட்சிகளின் வாக்குகள், நாளை (செவ்வாய்க்கிழமை) எட்டிவாடியில் உள்ள ரேணுகாம்பாள் கலைக்கல்லூரியில் எண்ணப்படுகின்றன.
இங்கு ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் தலைமை யில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
போளூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
போளூரில் பதற்றமான பகுதிகளான அல்லிநகர், சாவடி, வீரப்பன் தெரு, கோவிந்தசாமி தெரு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் சேத்துப்பட்டு, தேசூர், பெரணமல்லூர் பேரூராட்சி வாக்குகள் சேத்துப்பட்டு மசிபில் மழலையர் பள்ளியில் எண்ணப்படுகின்றன.
இங்கு போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போளூர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இன்று வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story