ஒரு கிலோ புளி ரூ.130-க்கு விற்பனை


ஒரு கிலோ புளி ரூ.130-க்கு விற்பனை
x
தினத்தந்தி 21 Feb 2022 7:37 PM IST (Updated: 21 Feb 2022 7:37 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் சந்தையில் ஒரு கிலோ புளி ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புளி சாகுபடி நடக்கிறது. இந்த பகுதிகளில் விளைச்சலாகும் புளியை திண்டுக்கல் நாகல்நகர் பகுதிக்கு வியாபாரிகள் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். 

அதன்படி நேற்று நாகல்நகரில் புளி விற்பனை அமோகமாக நடந்தது. கொட்டையுடன் கூடிய ஒரு கிலோ புளி ரூ.70-க்கும், கொட்டை நீக்கப்பட்ட புளி ரூ.130-க்கும் விற்பனை ஆனது. 

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு சந்தைக்கு புளி வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல் இந்த ஆண்டு நாங்கள் எதிர்பார்த்ததைவிட புளிக்கு கூடுதல் விலை கிடைத்துள்ளது. 

பொதுமக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட வியாபாரிகளும் திண்டுக்கல்லுக்கு வந்து புளியை வாங்கி செல்கின்றனர். தற்போது வெளிமாவட்ட வியாபாரிகளின் வருகை குறைவாக உள்ளது. அவர்களின் வருகை அதிகரித்தால் தான் எங்களுக்கு இன்னும் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றனர்.

Next Story