தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி. பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்த பகுதி.
சாலை பள்ளம் சரி செய்யப்படுமா?
வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே பேரி சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. அந்தச் சாலையின் நடுவே கால்வாய் உள்ளதால் அடைப்பு எடுப்பதற்காக பள்ளம் விடப்பட்டது. ஆனால் பல நாட்களாகியும் அந்தப் பள்ளத்தின் மேல்பகுதியை மூடவில்லை. மேலும் அதைச் சுற்றி தடுப்புகளும் வைக்கவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் தவறி விழுந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பள்ளத்தின் மேல் பகுதியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.
குரங்குகள் தொல்லை
வந்தவாசி காவலர்கள் குடியிருப்பு பகுதியில் குரங்குகள் அதிகமாகச் சுற்றித்திரிகின்றன. குரங்குகளை பார்த்து பெண்கள், குழந்தைகள் பயப்படுகிறார்கள். யரேனும் உணவுப் பொருட்களை வைத்திருந்தால் குரங்குகள் பிடுங்கி சென்று விடுகின்றன. குடியிருப்புகளில் உள்ள கேபிள் வயர், மின்வயர்களை பிடித்து குரங்குகள் தொங்கி அறுத்து விடுகின்றன. வனத்துறையினர் குரங்குகளை பிடித்து காட்டில் விட ேவண்டும்.
-முருகன், வந்தவாசி.
கழிவுநீர் கால்வாயை மூட வேண்டும்
வாணியம்பாடியை அடுத்த புதூர் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளிக்கு எதிரில் சி.என்.ஏ. ரோட்டில் மேம்பாலம் உள்ளது. அதன் எதிரில் காமராஜர் தெரு உள்ளது. இந்தத் தெரு பழைய சி.என்.ஏ. ரோட்டையும், புதிய பைபாஸ் சாலையையும் இணைக்கும் முக்கிய வீதியாக உள்ளது. அதில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. அந்த வீதியில் நகராட்சி நிர்வாகம் 10 அடி ஆழத்துக்கு கழிவுநீர் கால்வாய் அமைத்துள்ளது. கால்வாயை மூடாமல் சிமெண்டு சிலாபுகளை பல மாதங்களாக அடுக்கி வைத்துள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகம் சிமெண்டு சிலாபுகளால் கழிவுநீர் கால்வாயை மூட வேண்டும்.
-பர்வேஸ் அஹமத், வாணியம்பாடி.
ஏரிக்கரையில் வீசப்படும் இறைச்சி கழிவுகள்
திருப்பத்தூர் அருகே காக்கங்கரை ஏரி பகுதியில் திருப்பத்தூர்-தர்மபுரி சாலை உள்ளது. ஏரிக்கரையில் உள்ள பாலத்தில் காக்கங்கரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள இறைச்சிக்கடைகளில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து ஏரி பகுதியில் வீசுகிறார்கள். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இறைச்சி கழிவுகளை சாப்பிட நாய்கள் அங்கு வருகின்றன. திடீெரன நாய்கள் குறுக்ேக ஓடும்போது வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே ஏரிக்கரை பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிக்குமார், காக்கங்கரை.
சேதமடைந்த குடிநீர் தொட்டி
கே.வி.குப்பத்தை அடுத்த முடினாம்பட்டு பஞ்சாயத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு ெகாண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. அந்தத் தொட்டி பழுதடைந்தும், சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்தும் இரும்புக்கம்பிகள் வெளியே தெரியும்படி அபாய நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முரளிகிருஷ்ணன், முடினாம்பட்டு.
Related Tags :
Next Story