கேடயத்தில் அம்மன் வீதி உலா


கேடயத்தில் அம்மன் வீதி உலா
x
தினத்தந்தி 21 Feb 2022 9:37 PM IST (Updated: 21 Feb 2022 9:37 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மாசிமக திருவிழாவையொட்டி கேடயத்தில் அம்மன் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

வேதாரண்யம்: 
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் மாசிமக பெருவிழா கடந்த 29-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அதன் ஒரு பகுதியாக மீனாட்சி அம்மன் வீதி உலா நடந்தது. முன்னதாக மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட கேடயத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Next Story