ஆபத்தான மின்கம்பங்கள் அகற்றப்படுமா?


ஆபத்தான மின்கம்பங்கள் அகற்றப்படுமா?
x
தினத்தந்தி 21 Feb 2022 9:45 PM IST (Updated: 21 Feb 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

ஆலத்தூர் ஊராட்சியில் ஆபத்தான மின்கம்பங்கள் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திட்டச்சேரி:
ஆலத்தூர் ஊராட்சியில் ஆபத்தான மின்கம்பங்கள் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆபத்தான மின்கம்பங்கள்
 திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் ஆலத்தூர், அருள்மொழிதேவன், திருவள்ளுவர்நகர், மாதாகோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.மேற்கண்ட பகுதிகளுக்கு ஆலத்தூரில் இருந்து மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்போது இந்த பகுதிகளில் உள்ள 10-க்கும் அதிகமான மின்கம்பங்கள் சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும், மின்கம்பிகள் தாழ்வாகவும், 2 ஆண்டுக்கு மேலாக ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. 
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அச்சப்படுகின்றனர். தற்போது பருவநிலை மாற்றம் காரணமாகவும், மேலடுக்கு சுழற்சி காரணமாகவும்  பரவலான மழை பெய்து வருகிறது.மேலும் பருவமழை காலத்தில் மழையினால் உயிரிழப்புகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
அகற்ற வேண்டும்
இந்த ஆபத்தான மின் கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்து தரவேண்டும் எனவும், அப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைத்து தர வேண்டும் எனவும் மின்வாரியத் துறையினருக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்சேதம் ஏற்படுவதற்கு முன்பு ஆலத்தூர் ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பத்தை அமைத்தும், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைத்தும் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story