அமராவதி வனச்சரக பகுதியில் குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி


அமராவதி வனச்சரக பகுதியில் குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி
x
தினத்தந்தி 21 Feb 2022 9:45 PM IST (Updated: 21 Feb 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

அமராவதி வனச்சரக பகுதியில் குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி

தளி:
உடுமலை அமராவதி வனச்சரக பகுதியில் குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டனர்.
வனத்துறை ேராந்து பணி
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகு பூனை, குரைக்கும் மான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, மலைப்பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 
அவற்றுக்கான இருப்பிடம், உணவு, தண்ணீர் தேவையை வனப்பகுதி அளித்து அடைக்கலம் கொடுத்து வருகிறது. 
வனம் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பு அவற்றுக்கான உணவு மற்றும் நீராதாரம் வெளி நபர்கள் நடமாட்டம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக வனத்துறையினர் நாள்தோறும் சுற்று வாரியாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
தண்ணீர் நிரப்பும் பணி
இந்த நிலையில் வெப்பத்தின் தாக்குதலால் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளில் நீர்வரத்து குறைந்தது உள்ளதுடன், புற்களும் காய்ந்து வருகிறது. 
அதைத்தொடர்ந்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவையை நிறைவு செய்து கொள்வதற்காக வனப்பகுதியில் இருந்து வெளியேறி திருமூர்த்தி மற்றும் அமராவதி அணையை நோக்கி வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளிவரும் வனவிலங்குகளின் தாகம் தீர்ப்பதற்காக வனத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 
அதன்படி வன விலங்குகளின் வழித்தடங்கள் மற்றும் அடிவாரப்பகுதியில் கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விளைநிலங்களில் சேதம் தவிர்ப்பு
இதனால் வனவிலங்குகள் தொட்டியில் உள்ள தண்ணீரைக் குடித்துவிட்டு வனப்பகுதிக்குள் திரும்பிச்சென்று விடுகின்றன. இதற்கான பணியில் உடுமலை மற்றும் அமராவதி வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 
வனவிலங்குகளுக்கான தண்ணீர் தேவையை வனத்துறையினர் பூர்த்தி செய்து வருவதால் விளை நிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுவதும் தடுக்கப்பட்டு உள்ளது.

Next Story