திண்டுக்கல்லில் தியேட்டரை முற்றுகையிட்ட அஜித் ரசிகர்கள்
திண்டுக்கல்லில் அஜித் ரசிகர்கள் தியேட்டரை முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல்:
நடிகர் அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வெளியாகிறது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் பல சினிமா தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு நடக்கிறது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தியேட்டருக்கு நேற்று மாலை ரசிகர்கள் சிலர் டிக்கெட் வாங்க சென்றனர். அப்போது திரைப்படம் வெளியாகும் நாளில் முதல் காட்சிக்கு டிக்கெட் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ரசிகர்கள் தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தியேட்டரின் 3 நுழைவுவாயில்களும் மூடப்பட்டன. இதுபற்றி தகவல் அறிந்ததும் திண்டுக்கல் வடக்கு போலீசார் விரைந்து சென்று ரசிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவழியாக போலீசாரின் சமரசத்தை தொடர்ந்து ரசிகர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story