ஆக்கிரமிக்கப்பட்ட பொதுப்பாதையை மீட்க வேண்டும்- கிராம மக்கள்
ஆக்கிரமிக்கப்பட்ட பொதுப்பாதையை மீட்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அன்னவாசல் கிராமம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
அன்னவாசல் கிராமம் காளியம்மன் கோவில் தெருவில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கடந்த 1988-ம் ஆண்டு வீட்டு மனைகள் வழங்கப்பட்டது. அந்த வீட்டு மனையில் 48 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த 48 குடும்பங்கள் பயன்படுத்தும் பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பாதையை நாங்கள் பயன்படுத்த முடியவில்லை. மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மின்சார வசதி, சாலை வசதி, குடிநீர் வசதியும் பெற முடியவில்லை. எனவே அன்னவாசல் கிராமத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுப் பாதையை மீட்க வேண்டும். மேலும் அன்னவாசல் காளியம்மன் கோவில் தெரு மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story