தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 21 Feb 2022 10:14 PM IST (Updated: 21 Feb 2022 10:14 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்:
விபத்து தடுக்கப்படுமா?
ஆத்தூர் தாலுகா சித்தரேவில் இருந்து பெரும்பாறை செல்லும் சாலையில் அபாய வளைவு உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் ஆபத்தான பள்ளம் இருக்கிறது. அதை குறிக்கும் வகையில் பிளாஸ்டிக் தடுப்பு வைத்தும், விபத்துகளை தடுக்க முடியவில்லை. தினமும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வராஜ், ஆத்தூர்.
சேதம் அடைந்த சாலை
தேனியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கே.ஆர்.ஆர்.நகரில் இருந்து சிவாஜிநகர் வரை குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. இதற்காக பள்ளம் தோண்டியதில் சேதம் அடைந்த தார்சாலையை இதுவரை சீரமைக்கவில்லை. இதனால் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக மாறிவிட்டது. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும். -கதிரவன், தேனி.
சாக்கடை கால்வாயில் அடைப்பு
திண்டுக்கல் நாகல்நகர் மெங்கில்ஸ் சாலையில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் கழிவுநீர் முறையாக செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்து விட்டது. எனவே சாக்கடை கால்வாய் அடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, நாகல்நகர்.
குப்பை குவியல்
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை அடுத்த சின்னையாபுரத்தில் அங்கன்வாடி மையம் அருகே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. காற்று வீசும் போது சாலை வரை குப்பைகள் பரவி விடுகின்றன. மேலும் அதில் கழிவுகளும் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். -தனம், திண்டுக்கல்.


Next Story