ராதா கல்யாண விழா


ராதா கல்யாண விழா
x
தினத்தந்தி 21 Feb 2022 10:16 PM IST (Updated: 21 Feb 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

ராதா கல்யாண விழா நடந்தது

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறை காவிரி கரை அருகே ராதா கல்யாண விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகவும் தனியார் திருமண மண்டபத்தில் ராதா கல்யாண விழா நடந்தது. இதில் பஜனை, நாம சங்கீர்த்தனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. அதனை தொடர்ந்து ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாயவரம் ராதா கல்யாண அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Next Story