சுடுகாட்டுக்கு பாதை வசதி இல்லாததால் முதியவரின் உடலை வயல் வழியாக தூக்கி சென்ற அவலம்
கிருஷ்ணகிரி அருகே சுடுகாட்டுக்கு பாதை வசதி இல்லாததால் முதியவரின் உடலை வயல் வழியாக தூக்கி சென்ற அவலம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி:
சுடுகாட்டுக்கு பாதை வசதி
கிருஷ்ணகிரி அருகே தேவசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது பெரிய அக்ரஹாரம் கிராமம். இந்த பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி இல்லை. சுடுகாட்டை சுற்றி நான்கு புறங்களிலும் தனி நபர்களுக்கு சொந்தமான வயல்வெளி உள்ளதால், வயல்களிலும, சேற்றிலும் இறங்கி சடலத்தை தூக்கி செல்லும் நிலை உள்ளது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க்படவில்லை. இந்தநிலையில் நேற்று பெரிய அக்ரஹாரம் பகுதியில் உயிரிழந்த முதியவரின் உடலை அவரது உறவினர்கள் சிரமப்பட்டு வயலில் இறங்கி, சேரும் சகதியுமான வரப்புகள் வழியாக தடுமாறியபடி தூக்கி சென்ற அவல சம்பவம் நடந்தது.
கோரிக்கை
மேலும் மழைக்காலங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கியிருக்கும்போது உடலுடன் தடுமாறி விழுந்து செல்வதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு சுடுகாட்டுக்கு உடலை எடுத்து செல்லும் வகையில் பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story