சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு


சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 21 Feb 2022 10:44 PM IST (Updated: 21 Feb 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

பெரியகுளம்:
பெரியகுளம் வடகரை, வரதப்பர் தெருவை சேர்ந்தவர் பழனிவேல்ராஜன். இவரது மனைவி தங்கலட்சுமி (வயது 35). நேற்று மதியம் இவர், தென்கரையில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு சென்றார். பின்னர் அங்கு காய்கறி வாங்கி விட்டு தனது வீட்டுக்கு செல்வதற்காக, தேரடித்தெருவில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது அந்த வழியாக ேமாட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். 
இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர், தங்கலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்தான். பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளிலேயே தப்பி சென்று விட்டனர். நகையை பறிகொடுத்த தங்கலட்சுமி, இது தொடர்பாக பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம், பெரியகுளத்தை சேர்ந்த பெண்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story