புதுச்சத்திரம் அருகே கார் கவிழ்ந்து என்ஜினீயரிங் மாணவர் சாவு நண்பர்கள் 4 பேர் படுகாயம்
புதுச்சத்திரம் அருகே கார் கவிழ்ந்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். நண்பர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாமக்கல்:
புதுச்சத்திரம் அருகே கார் கவிழ்ந்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். நண்பர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார் கவிழ்ந்தது
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கோனானூர் எல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். லாரி அதிபர். இவருடைய மகன் மெய்யப்பன் (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) கல்லூரி திறப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து அவருடன் படிக்கும் நண்பர்களான நரேந்திரன் (20), கவுதம் (19), கோபி (20), சுனில்நாத் (20) ஆகியோர் மெய்யப்பனை பார்க்க வந்தனர்.
பின்னர் 5 பேரும் ஒரு காரில் புதுச்சத்திரம் அருகே உள்ள களங்காணியை சேர்ந்த நண்பர் ஒருவரை பார்க்க சென்றனர். காரை மெய்யப்பன் ஓட்டி சென்றார். இந்த கார் களங்காணி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டதாக தெரிகிறது. இதனால் மெய்யநாதனின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்தில் மெய்யப்பன் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே மாணவர் மெய்யப்பன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் கார் நடுரோட்டில் கவிழ்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story