தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்கள் விடுதலை
இலங்கை சிறையில் தவித்த தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதே நேரத்தில் அவர்களது 2 விசைப்படகுகளை அந்நாட்டு அரசுைடமையாக்கி இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.
ராமேசுவரம்,
இலங்கை சிறையில் தவித்த தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதே நேரத்தில் அவர்களது 2 விசைப்படகுகளை அந்நாட்டு அரசுைடமையாக்கி இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.
நாகை மீனவர்கள்
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி 2 விசைப்படகுகளில் 21 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கையின் பருத்தித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 21 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
அந்த மீனவர்கள் 21 பேரும் நேற்று பருத்தித்துறை கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விடுதலை
அப்போது நீதிபதி, நாைக மீனவர்கள் 21 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார். அதே நேரத்தில் மீனவர்களின் 2 படகுகளும் இலங்கை அரசுைடமையாக்கப்படும் எனவும் உத்தரவு பிறப்பித்தார். விடுதலை செய்யப்பட்ட 21 மீனவர்களும் விரைவில் விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிகிறது. நாகை மீனவர்களின் 2 விசைப்படகுகளை இலங்கை அரசுடைமையாக்கி பிறப்பித்த உத்தரவு தமிழக மீனவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இன்னும் 29 மீனவர்கள்
இலங்கை சிறையில் இன்னும் ராமேசுவரம் மற்றும் தொண்டி பகுதியை சேர்ந்த 29 மீனவர்கள் தவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story