8 மாதங்களாக நடவடிக்கை எடுக்காத புகார் மனுவை என்னிடமே திருப்பி கொடுங்கள். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
8 மாதங்களாக நடவடிக்கை எடுக்காத புகார் மனுவை என்னிடமே திருப்பி கொடுங்கள் என்று முதியவர் ஒருவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
வேலூர்
குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி அருகே உள்ள கே.வலசை கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 85), விவசாயி. இவர் நேற்று காலை கோல் ஊன்றியபடி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடக்கவில்லை. அதனால் முதியவர் அங்கிருந்த புகார் பெட்டியில் மனுவை செலுத்தினார்.
அந்த மனுவில், நான் எனது மனைவியுடன் வசித்து வருகிறேன். என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் எனது 2 மகன்களுக்கு சரிசமமாக பிரித்து கொடுத்து விட்டேன். அதன்பின்னர் அவர்கள் எங்கள் இருவரையும் கவனிக்கவில்லை. நானும் என் மனைவியும் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம். எனது மகன்களுக்கு கொடுத்த சொத்தை ரத்து செய்யுமாறு கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புகார் மனு கொடுத்தேன். அதன்மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புகார் மனுவை வைத்திருப்பதால் என்ன லாபம். அந்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது நான் கொடுத்த புகார் மனுவை என்னிடமே திருப்பி கொடுங்கள் என்று கூறியிருந்தார்.
Related Tags :
Next Story