காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர்
வேலூர் சேண்பாக்கம் நேதாஜி 2-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் பூவண்ணன். இவர் தனியார் காப்பீடு நிறுவனத்தின் காட்பாடி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சோனியா (வயது 33). இவர்கள் இருவரும் 11 ஆண்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
சோனியா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை பூவண்ணன், வேலைக்கு சென்றுவிட்டார். குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். வேலைக்கு சென்ற இடத்தில் பூவண்ணன், சோனியாவுக்கு போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அவர் வீட்டுக்கு வந்தபோது வீட்டில் உள்ள அறையில் சோனியா தூக்கில் தொங்கினார். அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கொணவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story