அரசு ஆஸ்பத்திரி அமைக்கப்படுமா
வடபாதிமங்கலத்தை மையமாக கொண்டு அரசு ஆஸ்பத்திரி அமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூத்தாநல்லூர்;
வடபாதிமங்கலத்தை மையமாக கொண்டு அரசு ஆஸ்பத்திரி அமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
வடபாதிமங்கலம்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள வடபாதிமங்கலம், புனவாசல், கிளியனூர், சோலாட்சி, எள்ளுக்கொல்லை காலனி, மாதாகோவில்கோம்பூர், தெலுங்கு தெரு, மாயனூர், பூசங்குடி மற்றும் ஓகைப்பேரையூர், குலமாணிக்கம், ராமநாதபுரம், மன்னஞ்சி, பெரியகொத்தூர், அன்னுக்குடி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.
அவசர சிகிச்சை
இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவசர சிகிச்சை மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற மன்னார்குடி மற்றும் திருவாரூர் போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது., மேலும் தூரத்தில் உள்ள அந்த ஊர்களுக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ள நோயாளிகளை கொண்டு செல்லும் வழியிலேயே பலர் இறந்து விடுவதாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்பத்திரி
குறிப்பாக பெண்களின் பிரசவம் மற்றும் சிறு குழந்தைகள் சிகிச்சை பெற முடியாமல் மிகவும் சிரமம் அடைந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் வடபாதிமங்கலத்தை மையமாக கொண்டு அரசு ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும் என பல வருடங்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் இது வரை வடபாதிமங்கலத்தை மையமாக கொண்டு அரசு ஆஸ்பத்திரி அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வடபாதிமங்கலத்தை மையமாக கொண்டு அரசு ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story