கொலை முயற்சியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை முயற்சியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 21 Feb 2022 11:54 PM IST (Updated: 21 Feb 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி, பிப்.22-
திருச்சி தில்லைநகர் ரகுமானியாபுரத்தைச் சேர்ந்த காதர்மொய்தீன் என்பவரை கொலை முயற்சி வழக்கில் தில்லைநகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் காதர்மொய்தீன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 16 வழக்குகள் நிலுவையில் இருந்த தெரியவந்தது. இவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணத்தில் இருந்து தெரிய வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த காதர்மொய்தீனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Next Story